கனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது.இதன்காரணமாக அங்கு கடும் குளிருடனான காலநிலை நிலவி வருவருவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கனடாவில் பனிப்பொழிவு காரணமாக கடந்த சில தினங்களாகவே விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்திருந்தனர்.
கனடாவில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்தாலும், Vanier பகுதியில் பனிச்சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காண்போரை கவரும் வகையில் இந்தப் பனிச்சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.





