
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அன்சாரி.
கடந்த 2017ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இதன்போது போட்டி குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட்டிம், அன்சாரி சில தகவல்களை பெறுவதற்காக பேச்சு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் உடனடியாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு குழுவிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் அன்சாரி தவறு செய்தது உறுதியானது.
இதன்காரணமாக அவருக்கு ஐசிசி 10 வருடம் தடைவிதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
