
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கட் சபை தேர்தலுக்காக மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக இரண்டு தரப்பினரும் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும் ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் அல்லது உப செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
