
இதேவேளை, மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைபெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய பிரான்ஸ் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கியவர்களைத் தேடி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும் எட்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் 12 மோப்ப நாய்களுடன் 240இற்கும் அதிகமான பொலிஸார், மீட்பு பணியாளர்கள், படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள் இன்றும் தொடர்ந்த நிலையில், எவரும் பனிச்சரிவிற்குள் சிக்கி காணாமல் போகவில்லை என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது அசாதாரணமான நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
