
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த போராட்டங்களில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிகளான நிக்கலஸ் சார்கோஸி, பிரான்சுவா ஒல்லந்து உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு பிரான்ஸில் உள்ள சுமார் 100 யூத கல்லறைகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன்- பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள கல்லறையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த உடைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கல்லறைகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டது மாத்திரமன்றி, யூத-விரோத வாசகங்களும் கல்லறைகளில் எழுதப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்ட்ராஸ்பேர்க் நகரின் அருகில் ஒரு கிராமத்திலுள்ள ஒரு கல்லறையை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் நேற்று நேரில் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
