ஹொண்டா தொழிற்சாலை 2021 ஆம் ஆண்டில் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் அனால் அதற்கு பிரெக்ஸிற் காரணமில்லையெனவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹொண்டா நிறுவனம் ஐரோப்பாவில் அமைந்துள்ள தனது ஒரே கார் தயாரிப்பு தொழிற்சாலையான ஸ்விண்டன் ஆலையை மூடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்தது.
ஹொண்டா நிறுவனம் தொழிற்சாலையை மூடுவதற்கு பிரெக்ஸிற்றே காரணமென பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஹொண்டா நிறுவனம் இக்கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் ஹொண்டா நிறுவனம் மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை எனவும் உலகளாவிய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமெனவும் பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.





