LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 2, 2018

அன்னதானம்

அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை

 அன்னதானத்தைப் பற்றி 
*“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி
ந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.*

கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் *அன்னதானம்* செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.

ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள்.
உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான்.
அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது”

- என்றார் பகவான்

பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிரைய, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சோல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும்.
பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.

அதனால்தான் ஔவையார்
*“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்*
*இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்*
*என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே*
*உன்னோடு வாழ்தல் அரிது. “* - என்றார்.

நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.
வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது.

அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.

ஆதலால் நண்பர்களே, அன்னதானம் செய்வதை நம் வாழ்வின் கடமையாக ஏற்போம். நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணியாற்றுவோம்.

*''தானத்தில் சிறந்தது அன்னதானம்!''*

கல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது...

ஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் பொருள் உதவி பெற நினைத்தார். 

அதனால், தன் மனைவியிடம் வழியில் சாப்பிடுவதற்கு ரொட்டி செய்து தருமாறு கேட்டார். 

அவர் மனைவியும், நிறைய ரொட்டிகளை செய்து கொடுக்க, அவற்றை பெற்று, புறப்பட்டார். 

வழியில் பசி ஏற்படவே, குளக்கரையில் அமர்ந்து, ரொட்டி பொட்டலத்தை பிரித்தார். 

அப்போது, குட்டிகளை ஈன்றிருந்த பெண் நாய் ஒன்று, வாலை ஆட்டியபடி, அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தது.

அதைப் பார்த்த விவசாயி, 'ஐயோ பாவம்... ரொம்ப பசி போல...' என்று எண்ணி, ஒரு ரொட்டியை எடுத்து, நாயின் முன் போட்டார்.

அதை, 'லவக்'கென்று விழுங்கிய நாய், பசி அடங்காமல் மேலும் அவரைப் பார்க்க, இன்னொரு ரொட்டியை கொடுக்க, அதையும் விழுங்கியது நாய். 

இப்படியே, எல்லா ரொட்டிகளையும் நாய்க்கு போட்டவர், 'பாவம்... வாயில்லா ஜீவன்; சாப்பிட்டு, எவ்வளவு நாள் ஆயிற்றோ... நாம், இன்று ஒருநாள் சாப்பிடாவிட்டால், என்ன குறைந்துவிட போகிறது...' என்று எண்ணியபடி தன் பயணத்தை தொடர்ந்தார்.

அரண்மனையில் மன்னனை சந்தித்து, 'மன்னா... என் மகளின் திருமணத்திற்காக தங்களிடம் பொருள் உதவி பெற வந்துள்ளேன்...' என்றார் விவசாயி. 

'குடியானவனே... நீ ஏதாவது புண்ணியம் செய்திருக்கிறாயா...? சொல்... அந்த புண்ணியத்தின் எடைக்கு எடை தங்கம் தருகிறேன்...' என்றார், போஜராஜன்.

சில வினாடிகள் யோசித்து, பின், 'மன்னா... நான் புண்ணியம் ஏதும் செய்ததாக நினைவில்லை; ஆனால், வரும் வழியில், ஒரு நாய்க்கு சிறிது ரொட்டி கொடுத்தேன், அவ்வளவு தான்...' என்றார்.

'சரி... அப்புண்ணியத்தை, இதோ இந்த தராசின் ஒரு தட்டில் வைத்ததாக கற்பனை செய்து கொள்...' என்று கூறி, தராசை காட்டினார் போஜராஜன்.

அவ்வாறே விவசாயி கற்பனை செய்ய, மறு தட்டில் பொற்காசுகளை போட்டனர், அரண்மனை பணியாளர்கள். 

தட்டு, அசையாமல் நிற்கவே, மேலும் போட, அப்போதும் தட்டு நகரவில்லை. கஜானாவே காலியாகியும், தராசு தட்டுகள் சிறிது கூட கீழிறங்கவில்லை.

அதிர்ந்து போன அரசர், கைகளை கூப்பி, 'ஐயா... தாங்கள் யார்?' என, பணிவாக கேட்டார்.

'மன்னா... நான் சாதாரண ஏழை விவசாயி; என் பட்டினியை பொறுத்து, பசியோடு இருந்த நாய்க்கு, சில ரொட்டிகளை போட்டேன்; வேறெதுவும் செய்யவில்லை...' என்றார்.

கண்கள் கசிய. 'ஐயா... தாங்கள் செய்தது அளக்க முடியாத புண்ணியம்; இதோ, அப்புண்ணியத்திற்கு ஈடாக என் ராஜ்ஜியத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார், போஜராஜன்.

ராஜ்யத்தை மறுத்து, மகள் திருமணத்திற்கு தேவையான பொருளை மட்டும் பெற்று, நன்றி செலுத்தி சென்றார், விவசாயி.

*பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை.* அதனால், இயன்றவரை, தேவையானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்! 

*'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...'* என்றும், *'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...'* என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.

அன்னதானத்தின் சிறப்பு பற்றி மரணத்தை வென்ற மாபெரும் சித்தர், ஜீவகாருண்ய வள்ளல் ,ஒளிஉடம்பு பெற்ற மகான் ஆசான் இராமலிஙக சுவாமிகள் கூறுவது

*கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி*
*கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி*
*வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி*
*வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து*
*பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து*
*பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு*
*தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்*
*தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்."*

-ஆசான் வள்ளலார்-

-திருவருட்பா (இறவா நிலை)-

*இக் கவியின் சாரம்*
*************************

தான் செய்த பாவங்கள் நீங்குவதற்காக கங்கை, காவிரி இன்னும் அநேக புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்று நினைப்பவர்கள் உண்டு. 

பெருமைக்குரிய கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்துவந்தால் இறையருள் பெருகும் என்று நினைப்பவர்களும் உண்டு. 

மேலும் விரத அனுஷ்டானம் கடைபிடித்து பட்டினி கிடந்து உடம்பை வருத்தி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. 

மேலும் அநேக வேதங்களில் சொல்லப்பட்ட வேள்விகள் செய்து அதன்மூலம் கடவுளின் ஆசி பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. 

இன்னும் சிலர் அந்தணர்களாகிய வேதியர்களுக்கு அவர் விரும்புகின்ற அனைத்தும் அள்ளித்தந்து இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. 

மேலும் பசுவை பூஜித்தும் அதனுடைய கழிவைப் பருகி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலே சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களையும் பின்பற்றி நடந்தபோதிலும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எந்த வகையிலும் ஆன்மலாபம் பெறமுடியாது என்பது அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய ஆசான் இராமலிங்கசுவாமிகளின் உபதேசமாகும். 

ஆன்ம லாபம் பெற விரும்புகிறவர்கள் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

*ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வோம் இறைவன் அருள் பெறுவோம்.....*


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7