
ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவில் இணைவதற்காக 2016 ஆம் ஆண்டில் சிரியாவுக்கு சென்ற கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஷமீமா பேகம் மீண்டும் லண்டன் திரும்புவதற்கான கோரிக்கையை கடந்தவாரம் முன்வைத்தார்.
ஐ.எஸ் இயக்கம் சிரியாவில் பலம் இழந்துள்ளமையால் அகதிகள் முகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள ஷமீமாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
தனது குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் பிரித்தானியாவுக்கு வருவதற்கு ஷமீமா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அவரது குடியுரிமை நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சு அறிவித்தது.
இந்த அறிவிப்புக் குறித்து கருத்து வெளியிட்ட ஷமீமா பேகத்தின் குடும்பத்தினர் உள்துறை அமைச்சின் முடிவு ஏமாற்றமளிப்பதாகவும் இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சின் இந்த முடிவு தனக்கு மட்டுமின்றி தனது மகனுக்கும் அநீதியானது என தெரிவித்த ஷமீமா பேகம் தனது கணவரின் நாடான நெதர்லாந்தில் தாம் குடியுரிமை கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்துக் குடிமகனான ஷமீமாவின் கணவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரிய போராளிகள் குழுவிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.
