2000 தொடக்கம் 2016 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் 793 திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி 586 தமிழ் திரைப்படங்களையும் 207 வெளிநாட்டு திரைப்படங்களையும் இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தணிக்கைக்குழுவானது மத்திய அமைச்சரவையின் கீழ் செயற்படுவதுடன், நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்கீழ் எந்தவொரு திரைப்படமும் திரையிடப்படுவதற்கு முன்பே தணிக்கை சான்றிதழை பெற்றுக்கொள்வது அவசியமாகும். அதன்படி எந்தவொரு திரைப்படத்தின் காட்சிகளையோ, வசனங்களையோ, திரைப்படத்தையோ தடை செய்யும் அதிகாரம் குறித்த தணிக்கைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.





