
மராட்டிய மாநிலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் நடிகை இஷா கோபிகர் பா.ஜ.க.வில் இணைத்துகொண்டு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவர் குறித்த கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே பலந்த போட்டி நிலவுகின்ற நிலையில் திரையுலக நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் அரசியல் கட்சிகளில் இணைவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அந்த வரிசையில் மோகன்லால் உள்ளிட்ட ஒருசில பிரபல நடிகர்களும், நடிகைகளும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் நடிகை இஷா கோபிகர் நரசிம்மா, நெஞ்சினிலே, காதல் கவிதை, ஜோடி போன்ற தமிழ்ப்படங்களிலும், ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
