
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகளை கொள்வனவு செய்தமை தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமுலாக்கத்துறை அந்நியச்செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் காணொளிக்காட்சி மூலம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அத்துடன், சசிகலா மீதான வழக்குகளை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி காணொளிக்காட்சி மூலம் திங்களன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதவான் மலர்மதி முன்பு சசிகலா ஆஜரானார்.
மொத்தம் 4 வழக்குகளில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சசிகலாவிடம் பெ்ப்ரவரி 12ஆம் திகதி அமுலாக்கத்துறை குறுக்கு விசாரணை செய்யும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
