எகிப்துடனான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.எகிப்து விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மக்ரோன் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபடாஹ் அல்-சிசி ஐ சந்தித்தார். குறித்த சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரான்சிலிருந்து 12 ரஃபேல் போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான எகிப்தின் உறுதிமொழி சுமார் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த விவகாரத்தை புதுப்பிக்க எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





