
குறித்த சந்தேகநபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 31 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருடப்பட்ட ஓவியம் எவ்வித பாதிப்பும் இன்றி தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிரைமியாவிலுள்ள மலையொன்றின் உச்சியை சித்தரிக்கும் வகையில் இயற்கை ஓவியக் கலைஞரான யுசமாip முரiனெணாi என்பவரால் வரையப்பட்ட ஓவியமொன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இந்த ஓவியமானது, ஓவியரின் மறைவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 1908ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஓவியம் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலானது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த திருட்டுச் சம்பவம் கண்காட்சி கூடத்தின் பாதுகாப்பு மீதான கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், கண்காட்சி கூடம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
