
டிஜிட்டல் சாதனங்களை ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பானவையாகவும் நெகிழ்திறன் உடையனவாகவும் உருவாக்குவதற்கு தேவையான வன்பொருளின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்காக இந்நிதி பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் டிஜிட்டல் அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேலதிகமாக £30 மில்லியன் நிதி ஒதுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் மேலதிக நிதி இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஒழிக்க பயன்படுமெனவும் வணிகங்கள், சேவைகள் மற்றும் நுகர்வோரை இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க உதவுமெனவும் தாம் நம்புவதாக வர்த்தக அமைச்சர் கிரெக் க்ளார்க் தெரிவித்துள்ளார்.
