
குறித்த தீ விபத்தில் 7 பேர் பலத்தகாயங்களுக்கு உள்ளானதாகவும் அதில் இருவர் ஆபத்தானநிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனி பிளேஸ்ஸில் அமைந்துள்ள குறித்த அந்தவைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லத்தில் படுக்கை அறை ஒன்றினுள் இருந்து, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவலில், அந்த வைத்தியசாலையில் இருந்த ஆறு பேரும், தீயணைப்பு வீரர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் இரண்டு வயதானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்தபோது, அங்கே அந்தப்படுக்கை அறையில் முற்றாக தீ பரவிய நிலையில் இருந்ததாகவும், அங்கே மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின்போது, அந்தவைத்தியசாலையில் இரண்டு தொகுதிகளில் இருந்த 41 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், பலத்தபோராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 36 தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டதாகவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஒன்ராறியோ மாகாண தீயணைப்புப்படை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
