
61 வயதுடைய கனேடியப் பிரஜை பெயரிடப்படாத ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்திடம் இருந்து, 375 மில்லியன் கனேடிய டொலரை ஏமாற்ற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அந்நிறுவனத்தின் கணக்கில் இருந்து ஹொங்கொங்கில் உள்ள ஒரு கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்காக போலி ஆவணங்களை பயன்படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கைதுசெய்யப்பட்டவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அத்தோடு இதுகுறித்து கனடாவின் சர்வதேச விவகாரத் துறையினரும் எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
கடந்த சிலமாதங்களாக இருநாடுகளின் இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கும்வகையில் கைதுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
