
Wednesday, January 30, 2019
சாகித்திய அகாதமி: பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் ‘ இந்த ஆண்டு இலங்கை தமிழ் எழுத்தாளர் சாந்தன் ஐயாத்துரை அவர்களுக்கு
சாந்தன் அய்யாதுரை அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருகின்றார். சார்க் நாடுகளில் உள்ள ஒரு எழுத்தாளருக்கு இந்த பெல்லோஷிப் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு சாந்தன் அய்யாதுரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் சாந்தன் அய்யாதுரை அவர்கள் ,இந்த அங்கீகாரம் கிடைத்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியோடு இருக்கிறார். இன்று காலை புதுடில்லியில் சாகித்திய அகாடமியின் இலக்கியவிழாத் தொடக்க நிகழ்வில் அவரும் பங்கெடுத்துக் கொண்டார். காலையில் வந்த நாதஸ்வர கலைஞர்களின் இசையோடு நிகழ்வு தொடங்கியது ‘’அந்த மெல்லிய பனியில் நாதஸ்வர இசை முழங்க , இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாட்டுப்புறக் ,கலைஞர்கள் மொழிபெயர்ப்பாளர்கள், கல்வியாளர்கள் என்று நிரம்பி இருந்த சூழலில் தான் பங்கெடுப்பது தனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை த்தந்தது “என்று மிகவும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் , இந்த ஃபெல்லோஷிப் ஒரு அங்கமாக அவர் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இலக்கியவாதிகளோடு தனித்த இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் ஒரு பண்பாட்டு பகிர்வாகவும் அந்த நிகழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம் 22 ம் தேதி யில் இருந்து மார்ச் 17 வரை அவர் தமிழகத்தில் இருப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது .நாளை நடைபெற உள்ள சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவில் அவர் உரை நிகழ்த்த உள்ளார்.
