தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதிவரை நடைபெறுமென சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ப. தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும், தி.மு.க சார்பில் துரைமுருகன், தி.மு.க கொறடா சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இம்மாதம் 5ஆம், 6ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் சட்டமன்ற கூட்டம் நடைபெறுமென முடிவு எடுக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறுமென அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் பின் சபாநாயகர் ப.தனபால் அ றிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10மணிக்கு ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகியது. புத்தாண்டின் முதல் கூட்டமான இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி ஆரம்பித்துவைத்தார்.
ஆளுநர் உரையில் இந்த ஆண்டு தமிழக அரசு தமிழ்நாட்டிற்கு செய்யவிருக்கும் சிறப்புத் திட்டங்கள் குறித்த செய்திகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.





