சிறந்த நாளைய தினத்தினை தீர்மானிப்பதற்கான பணியாற்றும்
மனோநிலையினையும் , மாற்றத்தினையும் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படுத்தும் அவசியத்தினை
தெளிவு படுத்தி 2019 ஆம்
ஆண்டின் சத்தியப் பிரமாணம் நிகழ்வு
அனைத்து அரச அலுவலங்களில் நடைபெற்றது
இலங்கை சனநாயக
சோசலிசக் குடியரசின் இந் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக
மாற்றியமைக்கும் புதிய ஆண்டின்
ஆரம்பத்தில் காலடி வைக்கின்ற இன்றைய முதல்
நாளில் அரச சேவை உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம்
மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு அனைத்து திணைக்களங்களிலும்
திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் நாடளாவியல் ரீதியில் இடம்பெறுகின்றது .
இதன் பிரதான
நிகழ்வானது ஜனாதிபதி செயலக செயலாளர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்
இடம்பெற்ற வேளையில் அதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர
சபையிலும் , மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக காரியாலயத்திலும் சத்தியப் பிரமாணம்
மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வி
சிறப்பாக இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக தேசிய
கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது .இதனை தொடர்ந்து அனைத்து
உத்தியோத்தர்களும் தமது சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .
புதிய ஆண்டில் இலங்கை வாழ் மக்களுக்கு
புதிய தொரு பொருளாதார மற்றும் புதிய சமுதாய பாதையினை திறந்து சிறந்த நாளைய தினத்தினை தீர்மானிப்பதற்கான பணியாற்றும் மனோநிலையினையும் ,
மாற்றத்தினையும் சகல
உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படுத்தும் அவசியத்தினை தெளிவு படுத்தி 2019
ஆம் ஆண்டின் முதல் நாளான அன்று அனைத்து
மாவட்ட செயலங்களிலும் , அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள
தலைவர்களின் முன்னிலையில் உத்தியோகத்தர்கள் தமது உறுதி மொழியினை எடுத்துக்கொன்டமை
குறிப்பிடத்தக்கது .
