
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 51 வயதானவர் என்றும் இச் சமபவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தவறான சம்பவம் காரணமாக அங்கிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அந்நாட்டு எல்லை பொலிஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜோனா ஹெல்மண்ட்ஸ் கூறியுள்ளார்.
அத்தோடு கைது செய்யப்பட்டவர் தொடர்ந்தும் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உலகளாவிய விவகாரங்களுக்கான கனடாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தூதரக அதிகாரிகள் இந்த செய்தி தொடர்பில் அறிந்திருந்தனர் ஆனால் அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்த போதும் தனியுரிமைச் சட்டத்தின் விதிமுறைகளின் காரணமாக எந்தவொரு தகவலும் அவர்களால் வெளியிடப்படவில்லை.” என கூறியுள்ளனர்
