வெளியாகியுள்ள 2018
ஆண்டுக்கான
உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான
மாணவர்கள் உயர்தர பரீட்சை சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில்
உள்ள பாடசாலைகளில் 2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு
தோற்றிய மாணவர்களில் பொறியியல் துறைக்கு 21 ,மாணவர்களும் மருத்துவத்துறைக்கும் 17 மாணவர்களும் மற்றும் ஏனைய துறைகளுக்கு அதிகமான மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்
இதில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை
மாணவி என் .நிருஷிகா வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிவித்து மாவட்ட மட்டத்தில்
முதல் இடத்தினையும் ,டிவ்யாணி சுதாகரன் ஏனைய துறையில் கலைப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிவித்து மாவட்ட
மட்டத்தில் முதல் இடத்தினையும் பெற்றுள்ளனர்
மாவட்டமட்டத்தில் முதல் இடத்தில் தெரிவு
செய்யப்பட்டு பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும்
பெருமை சேர்த்துள்ளனர்
இந்த மாணவிகளை பாடசாலை
அதிபர் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்
இதேவேளை இப்பாடசாலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஆறு மாணவிகளும் ,பௌதீக விஞ்ஞான பிரிவில் இரண்டு
மாணவிகளும் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர்
திருமதி க .சுபாஹரன் தெரிவித்தார்
