
பொலன்னறுவை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒரு சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
மேலும் போதைப்பொருட்கள் போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு அவற்றை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்
