மனத்தில் சஞ்சலம்
பணிந்தேன் உன்பதம்
விளக்கியெனக்கு
அருள்வாயே
சிவன்தாள் பணிந்தவர்
தமிழாய் வாழ்ந்தவர்
அரக்கர் என்றே
அழைத்தாரே
தவத்தால் உன்வரம்
தமக்குள் சிவமென
தரணியில் வாழ்பவர்
தவறாறே
விதைத்து பொய்யதை
புதைத்து மெய்யதை
புரட்டி போட்டது
யாரிங்கே
புகட்டி பாடமும்
புனைந்த கதைகளை
அகற்றி வென்றிடும்
வரம்வேண்டும்
குதித்து நடமிடும்
கூத்தா உந்தனை
கூப்பிக் கைதொழ
என்வாழ்வே
எழுத்தில் எழுந்திட
கருத்தும் சிறந்திட
கருவாய் சிவமே
வரவேண்டும்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏
