
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐஎஸ் பிடியில் சிக்கி உள்ள யாசிதி பெண்களை மீட்பதற்கான முயற்சியில் யாருமே ஈடுபடவில்லை. ஈராக்கிலும் சரி, சர்வதேச அமைப்புகளாக இருந்தாலும் சரி யாரும் அப்பெண்களைக் காப்பாற்ற வரவில்லை.
ஈராக்கில் பெண்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். நான் பாலியல் பலாத்காரம் குறித்து உரக்கப் பேசுவேன். ஐஎஸ் குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும்.
மேலும் அரபு நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட வேண்டும். அப்போதுதன யாசிதி போன்ற சிறுபான்மையின அமைப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.
யாசிதி பெண்கள் அவர்கள் இல்லத்துக்குத் திரும்ப உதவுங்கள். எங்களுடைய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் வாழ அனுமதியுங்கள் “ என தெரிவித்துள்ளார்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த ஒக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு காங்கோவைச் சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வேஜாவும், ஈராக்கைச் சேர்ந்த நாடியா முராத்துக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
