
யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “ஒரு மாற்று அணி தமிழ் மக்களுக்கு தேவை என்பதுடன், அந்த அணி ஓரிரு கட்சிகள் அல்லாது தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பலமான அணியாக உருவாக்கப்பட வேண்டும்.
அந்தவகையில் ஒரு கொள்கை வழியில், இதனுடன் இணையக் கூடிய சகல தரப்புக்களும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடியவாறு ஒன்றிணைய வேண்டும்.
இந்த நிலையில், மிக நீண்ட கலந்துரையாடல்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பல தரப்புக்களும் நடத்தியிருக்கின்றன.
அவ்வாறு பேச்சுக்களின் மூலம் ஒத்துவராதவர்களை விடுத்து, முன்னணியுடன் இணையக்கூடிய ஏனைய அனைத்து தரப்பினரும் இணைந்து பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
