சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்குச் சென்ற எல்லைப் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படைவீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்புப் படை வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடும் தாக்குதல் ஏற்பட்டது.
இதில் மாவோயிஸ்டுகளின் துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் படுகாயம்யடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு மோதல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.