இருதரப்புக்கும் இடையே இராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் என்ற வகையில், ஐக்கிய அரபு அமீரகம், அவருக்கு அந்நாட்டின் உயரிய ‘சயீத்’ விருதினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயான் இந்த விருதை மோடிக்கு சமர்ப்பித்தார்.
இதுகுறித்து அபுதாபி இளவரசர் மொகமது பின் சயீத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ள அவர், “இந்தியாவுடன் எமக்கு வரலாற்று மற்றும் இராணுவ உறவுகள் உள்ளன. அந்த உறவை மேலும் வலுப்படுத்தியவர் நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி.
அவரின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர், மோடிக்கு ‘சயீத்’ விருதை வழங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.