LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

கேரள வெள்ளத்தில் உதவியதற்காக ரூ.34 கோடி 'கடிதம்'அனுப்பிய விமானப்படை-: பினராயி விஜயன் வேதனை

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக விமானப்படை ரூ.33.79 கோடி 'பில்' அனுப்பியுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஏறக்குறைய மாநிலத்தில் ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.2,683 கோடி மட்டுமே வந்துள்ளது. மாநிலத்தைக் கட்டமைக்க இந்த நிதி போதாது என்றும் முதல்வர் பினராயி வேதனைத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த போது, கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒருவாரம் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பலியானார்கள், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், துணை ராணுவம், போலீஸார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.
வெள்ளத்தால் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்கள் ஏராளமானோரை விமானப்படையினர் மீட்டனர். குறிப்பாக முதியோர்கள், கர்ப்பினிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை மீட்ட விமானப்படையினரை பலரும் பாராட்டினார்கள். சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் 'தேங்க்ஸ்' என்று எழுதி நன்றியைத் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் விமானப்படையினரின் சேவைப் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தாங்கள் செய்த சேவைக்கு தற்போது கேரள மாநில அரசிடம் 'கடிதம்' அனுப்பி ரூ.33. 79 கோடி கேட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழை, வெள்ளத்தால் மாநிலத்தில் ரூ.31 ஆயிரம் கோடி மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேசிய பேரிடர் நிதியாக இதுவரை கேரள அரசுக்கு ரூ.2,683.18 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது மாநிலத்தைக் கட்டமைக்க போதுமானதாக இல்லை, மாநிலத்தை மீள்கட்டமைப்பு செய்வதும் கடினமாகும்.
அதுமட்டுமல்லாமல் முதல்கட்டமாக மத்திய அரசு வெள்ளத்தின் போது கேரள அரசுக்கு ரூ.600 கோடி நிதி வழங்கியது. ஆனால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்எண்ணெய் போன்ற பொருட்களை வழங்கியதற்காகவும், மீட்புப்பணிக்கு உதவியதற்காகவும் ரூ.290 கோடி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ரூ.600 கோடியில் ரூ.290 கோடி மத்திய அரசுக்கு மீண்டும் சென்றுவிடும்.
இது தவிர்த்து வெள்ளத்தின் போது, வீடுகளின் மாடியில் சிக்கி உயிருக்குப் போராடிய எண்ணற்ற மக்களை விமானப்படையினர் மீட்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், வெள்ளத்தின் போது செய்த மீட்புப்பணிக்காக ரூ.33.79 கோடி பில்தொகை செலுத்த விமானப்படை கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆதலால், கேரள அரசுக்கு உறுதியான உதவிகளைச் செய்யுமாறு கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருக்கிறேன்.
இதற்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதி மாநிலத்துக்கு உதவி செய்ய தேவையான நடவடிக்கை எடுங்கள், உயர்மட்டக்குழுவைக் கூட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். ஏனென்றால், உயர்மட்டக் குழுவின் முடிவுக்குப்பின்புதான் நிதி ஒதுக்கப்படும். ஆனால், நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். மத்திய அரசு இதுவரை உயர்மட்டக்குழுக் கூட்டம் கூட்டவில்லை. வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி நிதி உதவி வருவதையும் வாங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7