கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 187ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 962பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆறாயிரத்து 437பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 788பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, இரண்டு ஆயிரத்து 263பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.