நடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு தேசிய பட்டியலின் மூலமும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தேசியப் பட்டியலில் தெரிவாகும் உறுப்பினர் தொடர்பாக பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.
இதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.