இலங்கையில் மேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் 196 பேருக்கு இன்று வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய அறிவிப்புடன் இதுவரை இன்று ஒரேநாளில் 283 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.