LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 21, 2020

ஓய்வூதியம் தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்- பாதுகாப்பு அமைச்சு

ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் ஊனமுற்றோருக்கான
ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பாதுகாப்பு அமைச்சு புதிய அமைச்சரவை பத்திரமொன்றை விரைவில் சமர்ப்பிக்கும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நேற்று (வியாழக்கிழமை) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற அவசர கூட்டத்தில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஊனமுற்ற போர் வீரர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை முரண்பாடுகளை நீக்குவது எங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும்

ஜனாதிபதியும் பிரதமரும் தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக, இந்த பிரச்சினையை தீர்க்க முன்வந்துள்ளனர்.

ஒரு முன்னாள் படைவீரர் என்ற முறையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பரிவு காட்டுகிறேன். ஊனமுற்ற போர் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை தீர்க்கும் முதல் அமைச்சரவை பத்திரம் மார்ச் 12, 2019 அன்று அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒரு துணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் நிதி அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஓய்வூதிய திணைக்கள மூத்த அதிகாரிகள் அடங்குவர்.

கடந்த ஆட்சியின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களினால் கோரப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிதியமைச்சு ஓய்வூதியக் கொடுப்பனவிற்கு பதிலாக தனியான கொடுப்பனவுகளாக வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் தொடர்பான அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7