தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஒடிஷா, மேற்கு வங்கம் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வடக்கு 24 பர்கானா, ஹவுரா, முர்சிதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இணையத்தள சேவையை முடக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.