தமிழர் கட்சி மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்த போராட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணிக்கு சென்னையில் நடத்தப்படவுள்ளது.
தமிழர்களைப் புறக்கணித்தும், இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் திருத்தச் சட்ட மூலத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாகியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த போராட்டம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் கலவரமாக மாறியுள்ள நிலையில், இதுவரையில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இருப்பினும் அரசின் தீர்மனங்களை மீறுவதற்கு மாநிலங்களுக்கு உரிமை இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.