புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸினை திசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த திங்கட்கிழமை இரவு தாக்கியது.
மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் காற்று கரையை கடந்த போது, கன மழை பெய்தது.
இதனால் பல்வேறு நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் இலட்சக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.