
நடத்திய தாக்குதலில் ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை பயங்கரவாதிகள் சிலர் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அந்த வாகனத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் உட்பட 7 பேர் சென்ற நிலையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டெட்சு நகாமுரா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, இவருக்கு கவுரவ ஆப்கான் குடியுரிமை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
