LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 21, 2019

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எனினும் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையின் 20ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவின் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் குறித்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஒரு வாக்கினால் இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 10பேர் வாக்களித்தனர். ஆதரவாக 7வாக்குகள் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஓருவர் நடுநிலையாக இருப்பதாக தெரிவித்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர்.

இதனடிப்படையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையினால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தவிசாளருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச சபை பிரதேசம் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுவதன் காரணமாக கடந்த 19 அமர்வுகளிலும் பிரதேச சபையில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சபையினால் எந்தவித வேலைத் திட்டங்களும் பூரணமாக முன்னெடுக்கப்படவில்லையெனவும் இங்கு குற்றச்சாட்டுகள் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு வேண்டிய பகுதிகளிலேயே அபிவிருத்திகளை மேற்கொண்டதாகவும் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7