
சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவரது நகர்வுகளை கண்காணிக்கப்பட்டு வந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மவனெல்லவில் வசிப்பவர் என்றும் அவர் தற்போது கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த நபர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரிகள் நுவரெலியாவில் நடத்திய பிரசங்கங்களில் சந்தேகநபர் கலந்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
