
நலனுக்காக பௌத்த குருமார்கள் திரள வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் பேராளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
இலங்கை தாய்நாட்டை ஒரு வழித்தடத்தில் கொண்டு செல்லும் தொனிப்பொருளுடன் பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த மாநாடு கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இங்கு ஒரே நாடு என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான யோசனைகளை மாவட்ட ரீதியாக வௌிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதற்கிணங்க யோசனைகளை ஏற்றுக் கொண்டு உறுதி பூணும் அம்சமும் அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஞானசார தேரர், “இன மத பேதங்கள் இன்றி இந்த நாட்டில் அனைவரும் நிலையாக வாழ்வதற்கு உறுதிபூண வேண்டும். இந்து சமுத்திரத்தில் இரத்தினமாக இருந்த எமது தாய்நாடு இன்று இந்து சமுத்திரத்தின் கண்ணீராக மாறிப்போய் இருக்கின்றது.
எனவே, அந்த நிலைமையை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டுப் பற்றுடன் இந்த உறுதிமொழியை நாம் இதயங்களில் நிலைநிறுத்திக் கொள்வதுடன், அவற்றை முறையாகக் கடைப்பிடிப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
பண்டைய காலத்தில் மன்னர்களுக்கே ஆலோசனை வழங்கிய பௌத்த பிக்குகள் இன்று அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள். எனவே அதற்கு இடங்கொடுக்காது அரசியல் அழுத்தங்களுக்கு உட்படாது செயற்பட வேண்டும” என்று அவர் குறிப்பிட்டார்.
