
கூடியவரும், வடக்கு கிழக்கு மற்றும் தெற்கை ஒன்றிணைக்கக் கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அக்குரெஸ்ஸ தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே இன்று (சனிக்கிழமை) அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அவர் தெரிவிக்கையில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற சிறந்த தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி இது தொடர்பான அறிவிப்பு வௌியிடப்படும்.
தரிசு நிலமாக மாறிப்போன இலங்கையை மீண்டும் பயன்தரக் கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும்.
வேட்பாளர் யார் என்று எங்களிடம் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் கூறுகிறோம். பரந்த ஒரு கூட்டமைப்பை நாங்கள் உருவாக்குவோம். அதில் தலைவர் என்ற ரீதியில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சரியான தீர்மானங்களை எடுப்பார் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
