
கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பிறிதொரு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாரஹன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் மருத்துவமனைக்குச் சென்று வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை 2017 ஆம் ஆண்டு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தற்போது நாரஹென்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
