
இடையிலான விஷேட கூட்டம் ஒன்று நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதும் கட்சித் தலைவர் மாநாடு இடம்பெறுவதற்கான காரணம் குறித்து தௌிவுபடுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சட்டம் குறித்து, இதுவரையில் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதுபற்றி விவாதிக்காமல் இருப்பது குறித்து நாளை கலந்துரையாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சித் தலைவர் கூட்டம் தொடர்பாக முறையான தௌிவுபடுத்தல்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சில பணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் நாளை சபாநாயகர் தலைமையில் ஆராயப்பட வாய்ப்புள்ளது.
இந்த சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் என்ன கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்று இன்னும் தௌிவாகத் தெரியவில்லை.
அதேவேளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எமது குழுவினர் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளோம். குறிப்பாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதுதவிர அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் மற்றும் அசமந்தமாக போக்குகள் தொடர்பாக குறித்த சந்திப்பின் போது ஆராயப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
