
தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளக, பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச் சீட்டொன்றையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
