
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நியமிக்கமாட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை யாரின் பெயரும் அறிவிக்கப்படவில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மஹிந்த தனது ஆட்சிக்காலத்தில் கோட்டாபயவுடன் இணைந்து கடமையாற்றிய அனுபவம் உள்ள காரணத்தினால் அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு விருப்பமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யக் கூடியவரும், வடக்கு கிழக்கு மற்றும் தெற்கை ஒன்றிணைக்கக் கூடிய ஒருவரையே மஹிந்த ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பாரென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
