
தேசிய மாநாடு இன்று (சனிக்கிழமை) மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில், வட. மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தொடக்க நிகழ்வாக உலக தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியுடன் மாநாடு ஆரம்பமானது.
இதில் பிரபல அரசியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டதுடன், மாநாட்டில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
