
முன்னனேற்றங்கள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடல்கள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், ஆனைவிழுந்தான் பொது நோக்கு மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் கிராம சக்தி வேலைத் திட்டத்தின் ஏற்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, கிராமசக்தி தொடர்பான கலந்துரையாடல் இயக்கச்சி கோவில்வயல் பகுதியிலும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது கிராமசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் செயற்படுத்தப்படும் கிராமசக்தி அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக தற்போது உள்ள முன்னேற்றம் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
