
குறித்த நியமனத்துக்கான உத்தரவுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி அப்பதவியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
அவரது இடத்திற்கு இமாச்சலப்பிரதேசம் மாநில ஆளுநராக செயற்பட்ட ஆச்சாரியா தேவ் விராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்திய முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
