விருதுநகரில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அர்ஜூன் சம்பத் மேலும் கூறியுள்ளதாவது,
“எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும்தான் முதல்வர் பதவிக்கான போட்டி நிலவும்.
அதில் ரஜினி வெற்றி பெற்று முதலமைச்சரானால் இராஜராஜசோழனைப் போன்றதொரு ஆட்சியை அவர் நிச்சயம் வழங்குவார் .
இதேவேளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கொள்கை, கம்யூனிஸ்ட் கொள்கையாகும். ஆகையால் அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல” என அர்ஜூன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்