
சட்டப்பேரவையில் இன்று (திங்கட்கிழமை) பேசிய தி.மு.க.உறுப்பினர் மா.சுப்பிரமணியன், “அடையாறு, மத்திய கைலாஷ், அம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் நடை மேம்பாலங்களை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர், “மத்திய கைலாஷ் மற்றும் ராஜுவ் காந்தி சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எல் வடிவ மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய சுப்பிரமணியன், “சைதை தொகுதியில் தி.மு.க ஆட்சிக் காலங்களிலேயே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் பதிலளித்த வேலுமணி, “2006 முதல் 2011 தி.மு.க.ஆட்சிக் காலத்தில் 58 மேம்பாலங்கள் மாத்திரமே கட்டப்பட்டன. அதாவது 2011 முதல் 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 556 மேம்பாலங்களும் 2017 முதல் தற்போது வரையிலான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 304 மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன” என வேலுமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
