
இன்று (திங்கட்கிழமை) காலை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை இலங்கைக்கான சீனாவின் தூதர் செங் சூயுவான் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி சில்வா, இலங்கை மற்றும் சீன நட்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு சீன சமூகத்தின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
1994 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், 112 மீற்றர் நீளமும், 12.4 மீற்றர் அகலமும் ஆகும். இதன் எடை சுமார் 2300 தொன்கள் ஆகும். இதில் 18 அதிகாரிகள் உள்ளடங்களாக 110 பேரைக் கொண்ட பணியாளர் சபையும் கடமையில் ஈடுப்பட முடியும்.
இலங்கை கடற்படை கப்பல் குழுவில் இணைந்துக் கொண்ட பின்னர் இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ் கடல்களில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு இந்த கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
இக்கப்பலை உத்தியோகப்பூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 5 ஆம் திகதி சீனாவின் சங்ஹாயில் உள்ள கடற்படை பிரிவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
